தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

டேட்டா முடியப்போகிறதா: ஜியோ வழங்கும் அட்டகாசமான டேட்டா கடன்! - ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பு சலுகையாக, பயனர்களுக்கு டேட்டா கடன் வழங்கும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், கடன் வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள டேட்டாவை ஜியோ செயலி மூலம் பெற்றுக்கொண்டு, பின்னர் பணம் செலுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜியோ டேட்டா சலுகை
ஜியோ டேட்டா சலுகை

By

Published : Jul 3, 2021, 4:07 PM IST

மும்பை: ஜியோ நிறுவனம் புதிய டேட்டா கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், டேட்டா காலியாகும் நேரத்தில் பயனர்கள் ரூ.11 மதிப்பிலான ஒரு ஜிபி டேட்டாவை, அதிகபட்சமாக ஐந்து முறை கடனாக பெற்றுக் கொள்ளமுடியும்.

கடனாக பெறப்பட்ட டேட்டாவிற்கான கட்டணத்தை பின்னர் செலுத்திக் கொள்ளும் வசதியை ஜியோ பயனர்களுக்கு நிறுவனம் வழங்கியுள்ளது. அவசர கால தேவையைக் கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோடேட்டா கடன் சேவையை எவ்வாறு பெறலாம்:

  1. மை ஜியோ’ செயலியில் மேல் இடதுபுறத்தில் உள்ள 'மெனு'வை கிளிக் செய்யுங்கள்
  2. அதில் மொபைல் சேவைகளின் கீழ் ‘அவசரகால டேட்டா கடன்’ஐ (Emergency Data Loan) தேர்ந்தெடுங்கள்
  3. 'தொடரவும்' (Proceed) என்பதை கிளிக் செய்யுங்கள்
  4. தேவையான டேட்டாவை தெரிவு செய்த பின் ஆக்டிவேட் செய்யுங்கள்

ABOUT THE AUTHOR

...view details