அமெரிக்கா: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை ஸ்பேஸ்-எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரில் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான புளூ ஆர்ஜின், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கு நாசாவின் 2.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மூன் லேண்டர் திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.
இவ்வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஸ்பேஸ்-எக்ஸின் ஒப்பந்தத்தை இரண்டாவது முறையாக நிறுத்திவைத்தது.
இதில் கடுப்பான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், "ஜெஃப் பெசோஸ் ஓய்வுபெற்ற பின் தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுப்பதை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
புளூ ஆர்ஜின்
ஜெஃப் பெசோஸின் புளூ ஆர்ஜின் நிறுவனம் இந்த ஆண்டு நான்காவது முறையாக தனது புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. கடந்த முறை ப்ளூ ஆர்ஜின் நிறுவனரும் ஜெஃப் பெசோஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டு திரும்பினார். இருப்பினும் தற்போதைய கேப்ஸ்யூல்கள் மனிதர்களை கொண்டு செல்லவில்லை.
என்எஸ்-17 என அழைக்கப்படும் இந்த புதிய ராகெட், பணிகளுக்கு தேவையான சரக்குகளை எடுத்துச் செல்ல அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜினின் தனியார் தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதற்கு முன்பாக இது அதிகபட்சமாக 3 லட்சத்து 47ஆயிரத்து 430 அடி (105.6 கிலோ மீட்டர்) உயரத்தை அடைந்தது. என்எஸ்-17 ஏவுதளில் இருந்து கேப்ஸ்யூல்கள் தரையிறக்கம் வரை 10 நிமிடங்கள் 38 வினாடிகள் நீடித்தது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்தப் புதிய ராக்கெட் எட்டாவது முறையாக ஏவப்பட்டு தரையிறக்கப்பட்டது. என்எஸ்-17 க்கான பூஸ்டர் மற்றும் கேப்ஸ்யூல்கள் பறக்கும் சரக்கு பயனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நிறுவனம் தனது இரண்டாவது குழு விமானத்தை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.