2018-19ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பைத் தாண்டும் அனைவரும் கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாயத்திற்காக வீட்டுக்கடன், சேமிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.
வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு - tax
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருவாய் ரூ. 50 லட்சத்திற்குள் உள்ள தனிநபர், ITR 1 என்ற படிவம் மூலம் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம். இந்தக் கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக இருந்தது.
இந்நிலையில், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் வருமானவரி கணக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தாக்கல் செய்யலாம். காலதாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.