112 மடங்கு சந்தா
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி பங்குகளுக்கான விற்பனை கோரல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. அலுவலக விரிவாக்கப் பணிக்காக ரூ.640 கோடி திரட்ட வேண்டும் என்பதே ஐஆர்சிடிசியின் இலக்கு. ஒரு பங்கின் விலை என்பது ரூ.315 முதல் ரூ.320 வரையாகும்.
சில்லரை முதலீட்டாளர்களுக்கு 35 சதவிகித பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒருவர் குறைந்தபட்சம் 40 பங்குகளை வாங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.10 தள்ளுபடி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு கோடியே ஆறு லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் எதிர்பார்த்ததை விட, 112 மடங்கு சந்தா அதிகமாக பெறப்பட்டுள்ளது.
ரூ.72 ஆயிரம் கோடி
அதாவது ரூ.72 ஆயிரம் கோடிக்கு சந்தா பெறப்பட்டுள்ளது. பொதுவாக பங்கு வர்த்தகத்தில், 'முதல் பொது வழங்கல்' (ஐபிஓ) முதலீட்டாளர்களால் கவனம் கொள்ளப்படும். நிறுவனத்தின் நிதிநிலையை கவனத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள்.
இதுபோன்ற காலகட்டத்தில் அதிகப்படியாக யூகச்செய்திகளும் வெளியாகும். எனினும் முதலீட்டாளர்கள், பங்கு வெளியிடும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை, அந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு குறித்த புள்ளிவிவர தரவுகளை முதன்மையாகக் கவனத்தில் கொள்வார்கள்.
கடந்த மூன்று மாதங்களில் ஐஆர்சிடிசி நிறுவன அறிக்கை, அந்நிறுவனம் லாபத்தில் இயங்கிவருவதைச் சுட்டிக் காட்டியுள்ளது. இருப்பினும் ஐஆர்சிடிசி அதிகப்படியான முதலீடு சந்தாக்களைப் பெற்றது. அந்நிறுவனம் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க
ஐ.ஆர்.சி.டி.சி. பங்கு விற்பனை இன்று ஆரம்பம்: ரூ.640 கோடி திரட்ட திட்டம்.!