ஊரடங்கு காலத்தின்போது, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகித தள்ளுபடி என்பது, வைப்புத் தொகையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அகில இந்திய வங்கி வைப்புத்தொகை சங்கம் (AIBDA) கூறியுள்ளது. மேலும் எந்தவொரு வட்டித் தள்ளுபடியும் கடன் கலாசாரத்தையும், வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தையும் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை வரலாற்று ரீதியாக, கடன் வட்டித் தள்ளுபடி எந்த ஒரு பாதகத்தையும் விளைவித்தது இல்லை. ஆனால், இந்தச் சூழ்நிலையில் இது மாநில அளவில் நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.