தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

டிசிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய இன்ஃபோசிஸ் ! - infosys showed better growth in Q3 Quarter

மும்பை: டிசிஎஸ்ஸின் செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் வளர்ச்சி, சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது.

TCS slowdown growth

By

Published : Oct 14, 2019, 11:17 AM IST

இந்திய ஐ.டி நிறுவனங்களின் ஜாம்பவான் ஆன டாடா கன்ஸ்ல்டன்சி சர்வீசஸ்(Tata consultancy Services) கடந்த செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் வளர்ச்சியில் சரிவைச் சந்தித்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து Q2 காலாண்டுக்கான வருவாய் வளர்ச்சி 10.6 விழுக்காடுகள் இருந்த நிலையில், Q3 காலாண்டில் 8.4 விழுக்காடுகளாக சரிந்துள்ளது.

ஐ.டி நிறுவனங்கள் ஆன விப்ரோ (Wipro), காக்னிசன்ட் (Cognizant) போன்ற நிறுவனங்கள் சரிவைச் சந்திக்கும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் Q2 காலாண்டுக்கான வளர்ச்சி 9.9 விழுக்காடாக இருந்த நிலையில் Q3 காலாண்டில் 11.8 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு - உலக வங்கி

ABOUT THE AUTHOR

...view details