டெல்லி:விமான நிலையங்களில் செக்-இன் செய்ய கூடுதலாக 100 ரூபாய் வசூலிக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தில் செக் இன் செய்ய ரூ.100 வசூல் - இண்டிகோ நிறுவனம்! - indigo check in charges
பணியாட்களுடன் பயணிகளின் தொடர்பை குறைக்க இணையத்தில் செக்-இன் செய்ய விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன. இச்சூழலில் விமான நிலையத்தில் செக்-இன் செய்ய ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக பயணிகளுடனான தொடர்பை குறைக்கும் முயற்சியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளிடம், முன்கூட்டியே இணையதளங்கள் மூலம் செக்-இன் செய்ய விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
இச்சூழலில், பயணிகள் சிலர் விமான நிறுவனங்களின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல், விமான நிலையங்களில் செக்-இன் செய்ய காத்திருக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த, விமான நிலையங்களில் வந்து செக்-இன் செய்பவர்களுக்கு, ரூ.100 வசூலிக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.