தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரூ.1,030 கோடி தொகையை வாடிக்கையாளர்களுக்குத் திரும்பத் தந்த இண்டிகோ நிறுவனம் - கோவிட்-19 கால விமான முன்பதிவு

கோவிட்-19 கால முன்பதிவுசெய்த தொகையை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இண்டிகோ நிறுவனம் திரும்பக் கொடுத்துள்ளது.

IndiGo
IndiGo

By

Published : Mar 24, 2021, 7:39 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறை கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் முடக்கம் கண்டது. இரண்டு மாதத்திற்கு விமான போக்குவரத்துச் சேவை முற்றிலும் முடங்கிய நிலையில், உள்நாட்டு விமான சேவை மே மாத இறுதியில் தொடங்கப்பட்டது.

இந்த முடக்க காலத்தில் முன்பதிவு செய்ய பயணச்சீட்டுகளுக்கான தொகையை வாடிக்கையாளர்களிடம் திரும்ப வழங்க உச்ச நீதிமன்றம் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, இண்டிகோ நிறுவனம் இந்தத் தொகையை (ரீஃபண்ட்) அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அளித்துவிட்டதாகத் தெரிவித்தது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.1,030 கோடி நிலுவைத் தொகை செலுத்தி முடிக்கப்பட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பசுமை நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.7 லட்சம் கோடி - நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details