தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் வேலைவாய்ப்பின்மை

ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கும் வேலையின்மை காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலையின்மை அதிகரித்துள்ளதாக சி.எம்.ஐ.இ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

unemployment
unemployment

By

Published : Sep 3, 2020, 7:21 PM IST

நாட்டின் வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூன், ஜூலை மாத காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை உயர்வைச் சந்தித்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் வேலையின்மை தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்தில் வேலையின்மை 7.4 விழுக்காடாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில், 8.4 விழுக்காடாக உயர்வைச் சந்தித்துள்ளது. இது குறித்து சி.எம்.ஐ.இ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் பேசுகையில், ”நாட்டின் வேலையின்மை பரலாக இருந்தாலும் தற்போதை நிலையில், ஊரகப் பகுதிகளில்தான் அதிக வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது.

சி.எம்.ஐ.இ. நடத்திய ஆய்வு

பொதுமுடக்கத் தளர்வுகள் காரணமாக நகர்புறப் பகுதிகளில் மீண்டும் வேலைவாய்ப்புகள் பெருகத் தொடங்கியுள்ளதால், ஊரகப் பகுதிகள் மீண்டும் சுணக்கம் காணத் தொடங்கியுள்ளன. விரைவில் குடிபெயர் தொழிலாளர்கள் நகர்புறங்களுக்கு படையெடுக்கும் காலம் ஏற்படலாம்” எனக் கூறினார்.

நாடு முழுவதும் காரிப் பருவ அறுவடை காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வேளாண் நடவடிக்கைகள் தற்காலிக சுணக்கம் கண்டுள்ளதாகவும் சி.எம்.ஐ.இ ஆய்வு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:58 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை செலுத்த வோடபோன் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details