தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 10, 2020, 5:31 PM IST

ETV Bharat / business

கோவிட் - 19 தாக்கம் உப்பு உற்பத்தி 30% சரிவு

ஹைதராபாத்: கோவிட் 19 லாக் டவுனின் எதிரொலியாக நாட்டின் உப்பு உற்பத்தி 30 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

salt
salt

இந்தியாவின் உப்பு உற்பத்தி கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் 30 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. கோவிட் 19 பரவல் தடுப்பு காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் விளைவாக இந்த உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேவளை தேவைக்கு மேல் இருப்பு கைவசம் உள்ளதால், இந்த சரிவின் காரணமாக விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது. உப்பு ஏற்றுமதியில் உலகின் நான்காவது பெரிய நாடாகத் திகழும் இந்தியா மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உற்பத்தி பெரும் முடக்கத்தைக் கண்டது. ‘

மேலும் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது உப்பு உற்பத்திக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் பி.சி. ராவல் ஈடிவி பாரத்திற்கு தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதாவது, இந்தியா ஆண்டிற்கு 3.6 கோடி டன் உப்பு உற்பத்தி செய்கிறது. அதில் 80இலிருந்து 85 லட்சம் டன் உப்பு உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள உப்பு ஏற்றுமதிக்கும், சேமிப்புக் கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

தற்போது சில பகுதிகளில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கலேக் காரணம். தேவைக்கு அதிகமாக உப்பு கையிருப்பு உள்ள நிலையில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தை நாம் கொள்ளவேண்டியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மீண்டும் திரும்பும் வரலாறு - டாடா கைக்கு திரும்பச் செல்லும் மகாராஜா!

ABOUT THE AUTHOR

...view details