தமிழ்நாடு

tamil nadu

நாட்டின் ஏற்றுமதி 36% உயர்வு

By

Published : Feb 16, 2022, 1:28 PM IST

நாட்டின் மொத்த ஏற்றுமதி 2022 ஜனவரி மாதத்தில் 36 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

Indias export
Indias export

2022 ஜனவரியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) மதிப்பு 61.41 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 36.76 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 38.90 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.

ஜனவரி 2022-ல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 67.76 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 30.54 சதவீத மெதுவான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 30.19 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.

ஏப்ரல்-ஜனவரி 2021-22இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) 545.71 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 37.68 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் ஏப்ரல்-ஜனவரி 2019-20 விட 23.29 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது காட்டுகிறது.

ஏப்ரல்-ஜனவரி 2021-22இல் ஒட்டுமொத்த இறக்குமதிகளின் மதிப்பு 616.91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 54.35 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஏப்ரல்-ஜனவரி 2019-20-ஐ விட 20.15 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க:எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க வரிக்குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details