வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சிக்கலில் உள்ள இச்சூழலிலும், நாட்டின் உள்நாட்டு மொத்தஉற்பத்தி டிசம்பரில் 4.3 சதவிகிதமாக உயரும் என ஜப்பானிய ஆய்வு நிறுவனமாக நோமுரா (Nomura) கணித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் புள்ளிவிவர அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டில் 6.3, 2021ஆம் ஆண்டில் 6.5 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் முக்கியக் கொள்கை விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது.