கடந்த நிதியாண்டு முதல் சரிவைச் சந்தித்துவரும் இந்தியப் பொருளாதாரம் கரோனா பாதிப்பில் மேலும் சரிவடைந்துள்ளது. இந்தச் சரிவு வரப்போகும் நிதியாண்டிலும் எதிரொலிக்கும் எனப் பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் பல, கருத்து தெரிவிக்க உலக வங்கியும் அதற்கு ஏற்றார்போல் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், "2019-2020ஆம் நிதியாண்டைவிட 2020-2021ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. 2019-2020ஆம் நிதியாண்டில் 4.2 விழுக்காடாக இருந்த இந்தியப் பொருளாதாரம் 2020-2021ஆம் நிதியாண்டில் 3.2 விழுக்காடாகக் குறையும்" என உலக வங்கி தெரிவித்துள்ளது.