ஜியோவின் வருகை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைத்தது. ஏழுக்கும் மேற்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தநிலையில், ஜியோவின் வருகை அதை வெறும் மூன்றாக குறைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு நிறுவனமும் சந்தையில் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே பெரும் போராட்டம் நடத்திவரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போரிடியாக அமைந்தது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
நிலுவையிலிருந்த சுமார் 92 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தவு பிறப்பிக்க, வரலாறு காணாத நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டது.
இத்தீர்பினைத் தொடர்ந்து சேவைக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டணம் 40 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 499 ரூபாய்க்கு 82 நாட்கள் 1.5 ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியும் வழங்கப்பட்டு வந்த சேவை 698 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூபாய் 1,699க்கு இருந்த வருடாந்திர பேக் 2,398ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.