பங்குச்சந்தை தொடக்கத்திலேயே, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1708.24 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 33,989.16 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 519 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 9,939.40 எனவும் வர்த்தகமாகிவருகிறது.
1,700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு - சென்செக்ஸ் சரிவு
மும்பை: இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது.
![1,700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு Indian stock markets are falling](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6377732-thumbnail-3x2-stiock.jpg)
Indian stock markets are falling
யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கைக்குள் கொண்டுவந்ததால் பங்குச்சந்தையில் அதன் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்தன. அதனைத் தொடர்ந்து நேற்று ஒரு நாள் மட்டும் யெஸ் வங்கி பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் இன்று கடும் சரிவில் வர்த்தகமாகிவருகிறது.