தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சரக்குகள் செல்லும் பாதையை சீராக கணிக்க, பெட்டிகளில் ஆர்.எஃப் அடையாள குறிச்சொற்கள்! - இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள சரக்குப் போக்குவரத்து பெட்டிகள் அனைத்திலும் 2022ஆம் ஆண்டிற்குள் ரேடியோ அதிர்வெண் அடையாள குறிச்சொற்களை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் பகுதியில் 23,000 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில்
சரக்கு ரயில்

By

Published : Jul 24, 2020, 6:37 PM IST

டெல்லி: சரக்கு ரயில் பெட்டி போக்குவரத்தைக் கண்காணிக்க ரேடியோ அதிர்வெண் அடையாள குறிச்சொற்களை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் சரக்கு பெட்டிகள் இருக்கும் இடத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியும். முன்னதாக இது கைமுறையாக செய்யப்பட்டு வந்தது. அதில் நிறைய பிழைகள் எழும் சூழல் இருந்ததால், அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முதல் பகுதியில் 23,000 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு முடிவிற்குள் அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும் இது நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்பில்லா பயணச்சீட்டு பரிசோதனை: QR குறியீடு நடைமுறை அறிமுகம்!

முன்னதாக 6,000 ரயில் என்ஜின்களில் ஜிபிஎஸ் அமைப்பை நிறுவ உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details