தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய பொருளாதாரம் எழுச்சி பெறுவதற்கான வழிமுறைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?

தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் 142ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 136வது இடத்திற்கு முன்னேறி இருப்பதால் தொழில் செய்ய அனுமதிப்பதன் மூலம் இந்திய பொருளாதாரம் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது

indian economy
indian economy

By

Published : Dec 7, 2019, 7:51 AM IST

தற்போதைய இந்திய பொருளாதார வீழ்ச்சி:

ரங்கராஜன் போன்ற புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள், இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்றால் நமது ஆண்டு பொருளாதார வளர்ச்சியானது 8% எட்ட வேண்டும் என கணித்து கூறியிருந்தனர். இந்திய உற்பத்தித் துறையின் பலவீனம் நுகர்வோர் தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி, தனியார் முதலீட்டில் ஏற்பட்ட சுணக்கம் , உலக பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சி ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டது.

வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தற்போதைய பொருளாதார மந்தநிலையைப் பற்றி கவலை கொள்ளத்தேவையில்லை ஏனெனில் இதை தாமதமான முன்னேற்றம் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் எனக்கூறியுள்ளார். அறிவுபூர்வமான கார்பரேட் வரிகள் மற்றும் குறைந்த பட்ச மாற்று வரிகள் மூலம் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு உயிரூட்டுவதின் மூலமும் வெளிநாட்டு முதலீடுகளை கவர மத்திய அரசு முயற்சி செய்தபோதிலும், இத்தகைய செயல்பாடுகள் இந்திய பொருளாதார மந்தநிலையை மாற்ற எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை என்றே உணரப்படுகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு பெரியநாடு பொருளாதார வளர்ச்சியில் 14 இடங்கள் முன்னேறி 77ஆம் இடத்திலிருந்து 63ஆம் இடத்தை பிடித்தது வழக்கத்திற்கு மாறானதல்ல என இந்தியாவின் திறனை உலக வங்கி சமீபத்தில் வியந்து பாராட்டியுள்ளது.

அமெரிக்காவிற்கும் , சீனாவிற்கும் இடையேயான இடைவிடாத பொருளாதார போரால் தங்கள் நிறுவனங்களை இடமாற்றம் செய்ய விரும்பும் பன்னாட்டு கார்பரேட் முதலீட்டாளர்களை இந்தியாவின் பக்கம் ஈர்க்கும் பொருட்டு மத்திய அரசானது ஒரு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. இத்தகைய பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் பந்தயத்தில் வியட்னாம், இந்தியாவை முந்திச்செல்கிறது. ஆனாலும் அதிலுள்ள சில குறைபாடுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த அத்தகைய கார்பரேட் திமிங்கலங்களை இந்தியாவை நோக்கி இழுக்கத் தேவையான உதவிகளை செய்வதுடன் , ‘இந்தியாவில் செய்’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் அவர்களுக்கு துண்டில் போட்டு வருகிறது.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகபடுத்தப்பட்டு 28 ஆண்டுகள் ஆனநிலையில் பலமுறை தனது திறனை நிருபித்திருந்த போதிலும் இந்தியாவிற்கு வரவேண்டிய நேரடி அந்நிய முதலீடுகளுக்காக இன்றும் இந்தியா காத்துக்கொண்டு தான் இருக்கிறது. நிலபதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், ஒப்பந்தமேலாண்மை போன்றவற்றில் உயர்நிலை அமைப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளே இதற்கு காரணமாகும். இதுபோன்ற நிர்வாக இடையூறுகள் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையே நேரடியாக பாதிக்கிறது என்பது அதிர்ச்சிதரும் உண்மையாகும்.

இந்தியா முதலீடு செய்ய உகந்த நாடா?

தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் 142ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 136வது இடத்திற்கு முன்னேறி இருப்பது என்பது நாம் பெருமைப்படக்கூடிய நேரமாகும். ஆனால் இந்த ஆண்டு சர்வதேச இலட்சிய தொழில் செய்வதற்கான சூழல் அமைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளது. கடும் சர்வதேச வியாபார போட்டிகளை சந்திக்கவேண்டியுள்ள சூழலில் இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம் என துவூரி சுப்பாராவ் போன்றவர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

சொத்து பதிவு, கடன் பெறுதல் , சிறு முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு , வரி செலுத்துதல் , ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றில் அறிவுபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உலக வங்கியும் ஒரு முக்கிய காரணமாகும். தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 136வது இடத்தில் உள்ளது என்பது இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

நடைமுறை சிக்கல்கள் :

பிற நாடுகளோடு ஒப்பிடும்போது மோசமான சொத்து பதியும் முறைகளோடு கூடிய உயர் பத்திர பதிவு கட்டணங்கள் , உயர் பத்திர பதிவு கட்டணங்களை குறைக்க சொத்து மதிப்பை குறைத்து காட்டுதல் முதலான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இந்தியாவை தொழில் முனைவோரிடையே ஒரு மோசமான நாடாக சித்தரிக்கின்றன. வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்ட்டேட் துறையில் அடிப்படை நிலை சீர்திருத்தங்களில் உள்ள குளறுபடிகள் சர்வதேச சமுதாயத்தால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இத்துறைக்கான பட்டியலில் உள்ள 190 நாடுகளில் இந்தியா 154வது இடம் வகிக்கிறது. உலக வங்கித் தலைவரான டேவிட் மல்பாஸ் 2 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் நில விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி நாடு முழுக்க கிடைக்கச் செய்வதின் மூலம் நில வர்த்தகத்தில் வெளிப்படை தன்மையைக் கொண்டுவரமுடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக-நண்பன் கொள்கைகளை கடைபிடிக்கும் வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் ஒரே நடைமுறையை நாடு முழுக்க கடைபிடிப்பதால் சீனாவை விட்டு வெளியேறும் வர்த்தக நிறுவனங்களை தங்கள் பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளன. ஆனால் ஒப்பந்தங்களை முறிக்கும் ஊழல் சாதனைகளும், சர்ச்சைகளை விரைவில் தீர்க்காத நடைமுறைகளும் உள்ள இந்தியா முதலீட்டாளர்களின் சிம்ம சொப்பனமாகவே காணப்படுகிறது. பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் மக்களாட்சியும் , சுதந்திரமான நீதித்துறையும் உலக பொருளாதார மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு இந்தியக் கதவுகளை திறந்து விட்டால் அதிக வெளிநாட்டு முதலீடுகள் உள்ளேவரும் என நம்பப்பட்டது. ஒரு புறம் அமெரிக்கா அளவிற்கு சீனா 12 டிரில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து சாதனை செய்துவரும் வேளையில் இந்தியா போதுமான முதலீட்டாலர்களுக்காக காத்துக்கிடக்கிறது. இந்திய நிதி அமைச்சகத்தின் அலோசகர் சஞ்சீவ் சன்யால் கூற்றுப்படி இந்தியாவின் திறனற்ற கொள்கைகளால் ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் நடைமுறைபடுத்தப்படுவதில் உள்ள சிக்கலால் இந்தியா உலக நாடுகள் பட்டியலில் 163 – வது இடத்தில் உள்ளது. ஒரு விற்பனை விஷயத்தில் இந்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி சம்பந்தமான சர்ச்சையில்

இந்திய உச்ச நீதிமன்றம், கூட்டு கைபேசி நிறுவனமான வோடஃபோன் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இருந்தது. கடனை அடைக்க திறனற்ற இந்திய அரசு வழக்கம் போல நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இந்திய வருமானவரி சட்டத்தில் செல்லத்தக்கதாக ஒரு புதிய உட்பிரிவை இணைத்து அதன் மூலம் அரசானது நீதிமன்ற தீர்ப்புகளையும் ரத்து செய்யும் அதிகாரம் கொண்டதாக மாற்றப்பட்டது. இத்தகைய முடிவிற்கு எதிரான சர்வதேச கூக்குரல் பரவியதின் மூலம் முதலீட்டாளர் உணர்வுகளை மழுங்கச் செய்தது.

அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் :

தற்போதைய மகாராஷ்டிர உத்தவ் தாக்கரேயின் மும்பை –அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்ற முடிவும் , ஆந்திராவில் நீண்ட காலமாக சூரிய ஒளி மற்றும் வளி சக்தி மின்சாரத்திற்காக தேவையான ஒப்பந்தங்கள் போடுவதற்கான முயற்சிகளில் உள்ள முட்டுக்கட்டைகள் அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன. இத்தகைய விவகாரங்களில் ஏற்படும் சட்ட சர்சைகளின் முடிவு என்ன என்பது எவருக்கும் தெரியாது.

இதுபோன்ற தொழில் போட்டிகளால் ஏற்படும் மிகப்பெரும் வணிக சுனாமிகளை சந்திக்கவேண்டி இருந்தபோதிலும் சீனா தனது நேரடிஅந்நிய முதலீடுகளை 3% உயர்த்தியுள்ளது. சீனாவின் பலம் வாய்ந்த வணிக மற்றும் நிதி ஆதாரமே இத்தகைய வெளி முதலீடுகள் சீனாவின் உள்ளே வர காரணமாகும். இந்தியாவும் தனது பலம் வாய்ந்த நிதிஆதாரத்தின் மூலம் தற்சார்பு மாதிரி பொருளாதார நிலையை உருவாக்கி உலக அளவில் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்துமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

இதையும் படிங்க: கண்ணில் நீர் வழிய.... நெஞ்சில் காயம் ஏற்படுத்திய வெங்காயம்!

ABOUT THE AUTHOR

...view details