தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கோவிட்-19 தாக்கம்: செயற்கை நுண்ணறிவுத்துறையில் எழுச்சி கண்ட இந்தியா! - கோவிட்-19 செயற்கை நுண்ணறிவு

கோவிட்-19 வருகைக்குப்பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

AI adoption
AI adoption

By

Published : Dec 9, 2020, 9:38 PM IST

நடப்பாண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த பயன்பாடு குறித்து ஆய்வறிக்கை ஒன்றை பிடபிள்யூசி இந்தியா (PwC India) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செயற்கை நுண்ணறிவுத்துறையில் இந்தியா பெரும்பாய்ச்சலைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள 200 முன்னணி நிறுவனத்தின் தலைவர்களிடம் இந்த ஆய்வு நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது.

அவர்களில் 94 விழுக்காட்டினர் இந்த தொழில்நுட்பத்திற்கு தங்கள் நிறுவனத்தை தயார் செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.

பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத்துறை (AI) சிறப்பான வளர்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்தாண்டு 62 விழுக்காடு நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை செயல்படுத்திவந்த நிலையில் நடப்பாண்டு 70 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளது.

குறிப்பாக, தொலைத்தொடர்பு, ஊடகம், நிதிச்சேவை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஏ.ஐ தொழில்நுட்பம் சிறப்பான உயர்வை கண்டுள்ளது.

இந்த உயர்வுக்கு கோவிட்-19 முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வீட்டிலிருந்தே மக்கள் மனித தொடர்புகளை தவிர்த்துவரும் சூழலை கோவிட்-19 உருவாக்கியுள்ளதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு இது சிறப்பான காலமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:சீறிப்பாயும் இந்தியச் சந்தைகள்; வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details