டெல்லி:இதுகுறித்து வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவின்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பொறுத்தவரை சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 21 விழுக்காடு ஏற்றம் கண்டு 22.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேபோல இறக்குமதி 49 விழுக்காடு அதிகரித்து 87.5 பில்லியன் டாலராக உள்ளது.
அதன்படி 2020ஆம் ஆண்டில் 77.7 பில்லியன் டாலராக இருந்த மதிப்பு 2021ஆம் ஆண்டில் 110.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி என மொத்தமாக 42.2 விழுக்காடு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை 2019ஆம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் ஏற்றுமதி 33.9 விழுக்காடாக உயர்ந்திருந்தது.