தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'கரோனாவைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' - கவுதம் அதானி - கரோனாவை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

டெல்லி: கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வந்தாலும்; சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

Gowtham adani
Gowtham adani

By

Published : Jun 5, 2020, 5:08 PM IST

Updated : Jun 5, 2020, 6:59 PM IST

கரோனா வைரஸ் தடுக்கும் பணியில் மத்திய அரசு கடுமையாக ஈடுபட்டு வந்தாலும், மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் தாமதமாகவே எடுக்கப்பட்டது என தொழில் அதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

'நிலைமை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சூழலில், இது சரி... இது தவறு என நாம் நினைக்கக்கூடாது. எது தேவையோ அதனை உடனே செய்யவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை வணிகம், நுகர்வு, தொழில் நுட்பம் என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றது. எனவே, பொருளாதாரத்தை சரிசெய்ய நமக்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது. மக்களைப் பாதுகாப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசு அறிவித்த கரோனா நிவராணத்தொகை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு திட்டங்களால் இந்தியப் பொருளாதாரம் விரைவில் மேம்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜியோ இயங்குதளத்தில் மட்டும் 85% முதலீடு!

Last Updated : Jun 5, 2020, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details