தலைவர்கள் சந்திப்பு:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு, மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. அப்போது இருநாட்டுத் தலைவர்களும் வர்த்தகத்தில் புதிய யுக்தியை புகுத்துதல் குறித்து விவாதித்துள்ளனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலேவும் தெரிவித்து இருந்தார். மேலும் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு (2020) சீனா செல்கிறார் என்ற தகவலையும் அவர் உறுதிபடுத்தினார்.
நட்புறவு:
இந்தச் சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட சீன ஊடகங்களும் இந்தத் தகவலை கூறியுள்ளது. ஜி ஜின்பிங், நரேந்திர மோடி சந்திப்பு வர்த்தக தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்கள் இடையேயான கலாசாரத் தொடர்பை அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகங்களும் செய்தி தெரிவித்துள்ளன.
இந்தியாவும், சீனாவும் நெருக்கம் காட்ட அரசியல் காரணங்களும் உள்ளன. ஏனெனில் பாகிஸ்தான் சீனாவுடன் அதீத நட்பு பாராட்டி வருகிறது.
விரிசல்:
ஆனால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. வர்த்தகம் மட்டுமின்றி இரு தரப்பு நட்புறவிலும் அந்த இடைவெளி தொடர்கிறது. தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் மந்தநிலையில் தொடர்கிறது.