மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், வரி செலுத்துவோர் மத்தியில் வலுத்துக்கொண்டே செல்கிறது.
வரி செலுத்துவோர் வெளிப்படையாக வருமான வரி விகிதங்களைக் குறைக்க விரும்புகிறார்கள். தனிநபர் வருமான வரியைக் குறைத்தல், வேறு சில வரிகளுக்கு விலக்கு அளிக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம் என வரி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு, கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பிரிவு 87ஏ (87A)இன் கீழ் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் ஐந்து லட்சம் வரை வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் வீடு, வாகனங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் வாங்குவார்கள் என மத்திய அரசு திட்டமிட்டது.
இதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில், சாமானிய மக்கள் செலுத்தும் வரியில், வரி விலக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
சேவிங்ஸ் அக்கௌன்ட்(Savings Account) என்று அழைக்கப்படும் சேமிப்பு கணக்கு, நிலையான வைப்புகளிலிருந்தும்(fixed deposit) வட்டி வருமானத்திற்கு அரசாங்கம் அதிக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று டெல்லியைச் சேர்ந்த வரி வல்லுநர் கே.கே. மிட்டல் கூறியுள்ளார்.