தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 24, 2020, 4:09 PM IST

ETV Bharat / business

வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடு ஐந்தாவது முறையாக நீட்டிப்பு!

2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் காலக்கெடுவை டிசம்ம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Income tax
Income tax

கரோனா பேரிடர் காரணமாக 2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரித் தாக்கலுக்கான கடைசி நாள், 2020ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த இறுதித் தேதியானது நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இறுதித் தேதி மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதிக்கும், ஜூன் 30ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதிக்கும், பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதிக்கும், கடைசியாக நவம்பர் 30ஆம் தேதிக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரிடர் காலத்தில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்றவர்களுக்கு 6 மாத வட்டிக்கான வட்டி தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details