தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா காலத்தில் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்கும் ஐசிஐசிஐ வங்கி! - இந்தியாவில் கரோனா தொற்று

டெல்லி: கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது 80 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை எட்டு விழுக்காடுவரை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ICICI Bank
ICICI Bank

By

Published : Jul 7, 2020, 8:16 PM IST

கோவிட்-19 தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல துறைகளும் பெரும் இழப்பை சந்தித்துவருகின்றன.

இதனால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதிய உயர்வை நிறத்தி வைப்பது, ஊதியத்தைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தனது முன்கள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 80 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை எட்டு விழுக்காடு வரை உயர்த்தி வழங்கவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு என்பது ஜூலை மாதம முதல் அமலுக்குவரும் என்றும் பொதுமக்களை தினசரி நேரில் சந்திக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் சம்பள பிடித்தம், கட்டாய விடுப்பு உள்ளிட்டவற்றை அமல்படுத்திவரும் இந்தச் சூழ்நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்தச் செய்தி குறித்து ஐசிஐசிஐ வங்கி தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மார்ச் வரையிலான காலாண்டின் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 23 விழுக்காடு உயர்ந்து 1,221 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை

ABOUT THE AUTHOR

...view details