தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஐசிஐசிஐ வங்கியின் ஆன்லைன் சேவை பாதிப்பு: வாடிக்கையாளர்கள் தவிப்பு - அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள்

பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் திடீரென பாதிப்பை சந்தித்துள்ளன.

ICICI bank
ICICI bank

By

Published : Oct 16, 2020, 4:46 PM IST

ஐசிஐசிஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் இன்று (அக்டோபர் 16) முற்றிலும் முடக்கம் கண்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். வங்கியின் மொபைல் பேங்கிங் செயலி, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் காலையிலிருந்து செயல்படவில்லை என வாடிக்கையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், ஓ.டி.பி., கிரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்டவையும் செயல்படவில்லை. நவராத்திரி, தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனையை அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் ஆன்லைன் வர்த்தகம் தடைபடும் விதமாக இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த இடர்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள வங்கி நிர்வாகம், விரைந்து சீர் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:செப்டம்பரில் பயணிகள் வாகன விற்பனை 26% உயர்வு

ABOUT THE AUTHOR

...view details