டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், வருமான வரி செலுத்திய 59.68 லட்சம் பேருக்கு 1.40 லட்சம் கோடி ரூபாயை வருமான வரித்துறை ரீஃபண்ட் செய்துள்ளது.
ரீஃபண்ட் செய்த வருமான வரித்துறை! - வருமான வரித்துறை
டெல்லி: டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில் தனிநபர் வருமான வரியில் 38,105 கோடி ரூபாய் ரீஃபண்ட் செய்யப்பட்டுள்ளது.
இதில், தனிநபர் வருமான வரியில் 38,105 கோடி ரூபாயும் கார்ப்பரேட் வரியில் 1.02 லட்சம் கோடி ரூபாயும் ரீஃபண்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 1 வரையிலான காலக்கட்டத்தில், 59.68 லட்சம் பேருக்கு 1,40,210 கோடி ரூபாயை மத்திய நேரடி வரி வாரியம் ரீஃபண்ட் செய்துள்ளது.
57,68,926 வழக்குகளில் தனிநபர் வருமான வரியில் 38,105 கோடி ரூபாய் ரீஃபண்ட் செய்யப்பட்டுள்ளது. 1,99,165 வழக்குகளில் 1,02,105 கோடி ரூபாய் ரீஃபண்ட் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.