ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான டிம் குக் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்தார். அதில், டெஸ்லா மோட்டார்ஸ் தலைவர் எலான் மஸ்க்குடன் தனக்கான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
2018ஆம் ஆண்டில் எலான் மஸ்க் தொடங்கிய டெஸ்லா கார் நிறுவனம் ஆரம்ப காலத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை. எனவே, அதை ஆப்பிள் நிறுவனத்திற்கு விற்க எலான் மஸ்க் திட்டமிட்டதாகவும், இதற்காக டிம் குக்கை தொடர்புகொள்ள முயன்றதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் ஓ.கே. ஆகியிருக்கும்பட்சத்தில் அது டெக் உலகையே புரட்டிப்போட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் தனது சோதனை பாதையைக் கடந்து, தற்போது சந்தையில் உச்ச நிறுவனமாக அதை மாற்றியுள்ளார்.