பெட்ரோல், டீசல் பயன்பாடுகளால் ஏற்படும் காற்று மாசுகளைத் தவிர்க்க எலக்ட்ரிக் வாகனங்கின் மீது பெருநிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எலக்ட்ரிக் எஸ்யுவி கார் ஆக "ஹூண்டாய் கோனா" என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் 39.2kWh பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 452 கிமீ பயணிக்கமுடியும். மேலும் இது 0 முதல் 100கிமீ வேகத்தை வெறும் 9.7 நொடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.