இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கியத் தகவலை லிங்க்டு-இன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்பிவருவதால், வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த ஏப்ரல், மே மாத காலகட்டத்தில் நாட்டின் புதிய பணிவாய்ப்புகளைக் குறிக்கும், வேலைக்கு ஆள்களை சேர்க்கும் எண்ணிக்கை -50 விழுக்காடாக வீழ்ச்சி கண்டது. ஜூலை மாதத்தில் அது மெல்ல சீரடைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 12 விழுக்காடாக உயர்ந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாத இறுதியில் 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.