தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி

எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Roshni Nadar
Roshni Nadar

By

Published : Dec 3, 2020, 8:49 PM IST

இந்தியாவின் பணக்கார பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடத்தை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி பிடித்துள்ளார்.

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல்லின் தலைவராக இவர் இந்தாண்டு(2020) ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54,850 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்த இடத்தில் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசும்தார் ஷா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.36,600 கோடியாக உள்ளது. ரூ.21,340 கோடி மதிப்புடன் யு.எஸ்.வி நிறுவனத் தலைவர் லீனா காந்தி திவாரி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

நூறு பேர் கொண்ட பட்டியலில் மருந்தகத் துறையிலிருந்து 13 பேரும், ஜவுளித்துறையிலிருந்து 12 பேரும், சுகாதாரத் துறையிலிருந்து 9 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையிலிருந்து 32 பேரும், டெல்லியிருந்து 20 பேரும், ஹைதராபத்திலிருந்து 10 பேரும் இடம்பிடித்துள்ளனர். சமூக பணிகளுக்காக அதிக கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனு அகா முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க:இந்தியப் பொருளாதாரம் 'V' வடிவத்தில் மீண்டுவருகிறது: நிதியமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details