கரோனா பாதிப்பு அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை கடந்து வர்த்தக நடவடிக்கைகளை மீட்டெடுக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இத்தகையை சூழலில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
பல்வேறு மாநில அரசுகள் தங்களுக்குரிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றன. குறிப்பாக, கரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சவாலாக உள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசிடம் நிதி கேட்டுவருகிறது.