ஆகஸ்ட் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் 87 ஆயிரத்து 422 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் 86 ஆயிரத்து 449 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இதில் மத்திய ஜி.எஸ்.டி. வருவாய், 15 ஆயிரத்து 906 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி. வருவாய் 21 ஆயிரத்து 064 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் 42 ஆயிரத்து 264 கோடி ரூபாயாகவும், செஸ் வரிவசூல் 7 ஆயிரத்து 215 கோடி ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.