தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

GST collection: மீண்டும் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல் - சரக்கு மற்றும் சேவை வரி வசூல்

நவம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

GST collections in November
GST collections in November

By

Published : Dec 1, 2021, 7:33 PM IST

நவம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தத்தொகை 25 விழுக்காடு அதிகமாகும். செப்டம்பர் மாத புள்ளிவிவரப்படி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகை ரூ.66,815 கோடியாகவும், மத்திய ஜிஎஸ்டி ரூ.23,978 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.31,127 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. செஸ் வரியாக ரூ.9,606 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகம், "தொடரும் பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ஒருமுறை உச்சம் தொட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட பின் வசூல் ஆகியுள்ள இரண்டாவது அதிக தொகை இதுவே.

மாநிலங்களின் உதவியுடன் போலி பயனாளர்கள் நீக்கம், வரி எய்ப்பவர்களை கண்டறிதல் போன்ற நடவடிக்கை காரணமாக ஜிஎஸ்டி வசூல் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூலில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா ரூ.18,656 கோடியுடன் முதலிடத்திலும், குஜராத் ரூ.9,569 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா ரூ.9,048 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க:தீப்பெட்டி விலை: இன்றுமுதல் இரு மடங்கு விலை உயர்வுடன் வத்திக்குச்சி!

ABOUT THE AUTHOR

...view details