பிக்கி அமைப்பைச் சார்ந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த், இந்தியாவின் பொருளாதார மேம்பாடு குறித்து உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, உலகின் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முக்கிய திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகிறது. தற்சார்பு இந்திய திட்டம் என்பது இந்தியாவை தனிமைப்படுத்துவது அல்ல. மாறாக உற்பத்தி மூலம் இந்தியாவை பலப்படுத்தி உலக வர்த்தகச் சங்கிலியில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்வதாகும்.
இதற்கு புதிய யுக்திகளை உற்பத்தி துறையில் புகுத்த வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யவுள்ளன என்றார்.