தமிழ்நாடு

tamil nadu

ஹெச்.ஏ.எல் பங்குகளை தனியாருக்கு விற்க தயாராகும் மத்திய அரசு!

By

Published : Aug 27, 2020, 4:56 PM IST

பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் 15 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

HAL
HAL

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் பங்குகளை தனியார் வசம் விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்.இன் ஒரு பங்கை ரூ.1,001 கணக்கில் 15 விழுக்காடு பங்குகளை சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு விற்கவுள்ளதாக மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் 89.97 விழுக்காடு பங்குகள் அரசின் வசம் உள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் பங்கு விற்பனை மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று (ஆக்.27) மற்றும் நாளை (ஆக்.28) தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்.க்கு வாய்ப்பு அளிக்கமால் தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையனஸ்க்கு வாய்ப்பு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

இந்தச் சூழலில், ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் பங்குகளை தற்போது விற்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் டிராய்!

ABOUT THE AUTHOR

...view details