தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பொதுத்துறை நிறுவனங்களில் இனி தனியார் பங்களிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களில் கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு துறையை லாபகரமாக இயக்க வழிவகை செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

PSU
PSU

By

Published : May 17, 2020, 6:54 PM IST

மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று பொதுத்துறை நிறுவன விதிகளில் முக்கிய மாற்றங்களை அவர் அறிவித்தார். அதன்படி, பொதுத்துறை நிறுவனக் கொள்கைகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியே கண்டறியப்பட்டு அவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படும். அதை தவிர்த்து மற்ற இடங்களில் தனியார் துறைக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றார்.

மேலும், நிர்வாகச் செலவுகள் குறைக்கப்பட்டு திறன்களை சீராகப் பயன்படுத்தும் விதமாக ஸ்டிராடிஜிக் துறைகளில் ஐந்துக்கும் குறைவான பொதுத்துறை நிறுவனங்களை இனி இயங்கும் எனவும் மற்றவை தேவைக்கேற்ப இணைப்பு நடவடிக்கை மற்றும் தனியார் மையத்திற்கு உட்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details