நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த், முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தனியார் துறை சார்ந்த முதலீடுகள் அதிகரிக்க வேண்டிய காலகட்டம் இது.
சிறு, குறு நிறுவனங்கள் மூலம்தான் நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை மேம்படும். சிறு, குறு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வளமாக செயல்பட அவற்றுக்கு கடனுதவி மிக அவசியம்.
சர்வதேச நாடுகளில் ஜி.டி.பி. மற்றும் தனியார் துறை சார்ந்த கடனுதவியை ஒப்பிடும்போது, இந்தியாவில் அதன் விழுக்காடு குறைவாகக் காணப்படுகிறது. பொருளாதரத்தில் வேகமாக வளர்ந்துவரும் சீனா போன்ற நாடுகளில் தனியார் நிதிச்சேவைகள் சிறப்பாக உள்ளன. தற்போதைய நிலையில் நாட்டின் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி கடன் முதலீடு தேவை எனக் கூறினார்.