தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவரா நீங்கள்? - அப்படின்னா இது உங்களுக்கான நற்செய்திதான்! - மத்திய அரசு ஜிஎஸ்டி

டெல்லி: NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவர்களுக்குச் சேவையை எளிமையாக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

GST
GST

By

Published : Jun 9, 2020, 9:16 AM IST

Updated : Jun 9, 2020, 1:39 PM IST

இந்தியப் பொருளாதாரம் அதிகமாக சரக்கு மற்றும் சேவை வரி என்றழைக்கப்படும் ஜிஎஸ்டியை நம்பித்தான் இருக்கிறது.

இந்நிலையில், NIL ஜிஎஸ்டி வரிக்கணக்கைத் தாக்கல்செய்பவர்களின் நலன்கருதி மத்திய அரசு நேற்று (ஜூன் 8) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "குறுஞ்செய்தி வாயிலாக ஜி.எஸ்.டி.ஆர். - 3பி (GSTR - 3B) விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து மாதாந்திர வரிக்கணக்கைத் தாக்கல்செய்யும் இந்தப் புதிய வசதி இன்றுமுதல் (ஜூன் 8) அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, குறுஞ்செய்தி மூலம் தங்கள் NIL ஜிஎஸ்டி வரி கணக்கைத் தாக்கல்செய்யலாம். இது 22 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்த வரிசெலுத்துவோருக்கு உதவும்.

இனி NIL ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் சரக்கு மற்றும் சேவை வரித் தளத்தில் (GST Portal) உள்நுழைய தேவையில்லை. அவர்கள் அத்தளத்தில் தங்கள் கணக்கில் உள்நுழைந்து ஒவ்வொரு மாதமும் தங்கள் வருமானத்தை தாக்கல்செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை" என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

NIL ஜிஎஸ்டி

குறிப்பிட்ட மாதத்தில் தொழிலுக்காக ஒரு நிறுவனம் எந்தப் பொருளையும் வாங்காமலும் விற்காமலும் இருந்தால் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரிதான் NIL ஜிஎஸ்டி என்று அழைக்கப்படுகிறது. இதற்கான ரிட்டனைக் குறிப்பிட்ட அந்த நிறுவனம் தாக்கல்செய்ய வேண்டும்.

இதிலுள்ள குறைகளைக் களையவே மத்திய அரசு குறுஞ்செய்தி மூலம் வரிக்கணக்கைத் தாக்கல்செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.

இதையும் படிங்க: ராமர் கோயில் கட்டுமான பணிகள் ஜூன் 10ஆம் தேதி தொடக்கம்

Last Updated : Jun 9, 2020, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details