இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை செலவு மீட்டெடுப்பிலிருந்து உற்பத்தி இலக்குகள் வரையிலான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும், நிறுவனங்களும் அரசாங்கமும் நீண்ட மற்றும் விலையுயர்ந்த மத்தியஸ்தத்தை நாடியுள்ளது.
இதை சமாளிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் எண்ணெய் செயலாளர் ஜி.சி. சதுர்வேதி, முன்னாள் ஆயில் இந்தியா லிமிடெட் தலைவர் பிகாஷ் சி போரா மற்றும் ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சதீஷ் பாய் ஆகியோரை உள்ளடக்கிய சிறந்த நபர்கள் / நிபுணர்களின் குழு ஒன்றை அரசாங்கம் அமைத்தது.
இந்த குழு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் அதிக நம்பிக்கையைத் தூண்டவில்லை, ஏனெனில் அவர்களின் பெரும்பாலான தகராறுகள் ஒப்பந்த விளக்கங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் அரசாங்கத்துடன் தொடர்பில் இருந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.ஆனால், அதே அரசாங்கம் தான் பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது மட்டுமின்றி அந்த குழு உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கான விதிமுறைகளை வழங்குகிறது.
கிடைத்த தகவலின்படி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான வணிக அல்லது உற்பத்தி பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தக்காராக இந்த குழுவினர் செயல்படுகின்றனர்.ஒரு தீர்மானம் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டவிட்டால், அதைத் தீர்ப்பதற்கு நீதிமன்றத்தை நாடினாலும் முடியாது.எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சுற்றியுள்ள விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான பெரும்பாலான சர்ச்சைகள் நிறுவனங்கள் மற்றும் டிஜிஹெச் இடையே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சைகளை சமாளிக்க, காலவரையறை தீர்மானத்திற்காக நிபுணர் குழுவிற்கு ஒப்பந்தங்கள் அனுப்பப்பட வேண்டும் என்று அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வந்தாலும், இதில் சில நபர்கள் தலையீடு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும், எந்தவொரு காரணங்களையும் கூறாமல், தேவைப்படும்போது, இந்த குழுவின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றுவதற்கான உரிமையும் அரசாங்கம் கொண்டுள்ளது.இந்த குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும், இந்த குழுவினர் தீர்மானத்தை மூன்று மாதங்களுக்குள் தீர்க்கும் வகையில் செயல்படுகின்றனர்.