இந்தியாவில் ரயில்வே துறை எவ்வித சிக்கலுமின்றி செயல்படுவதில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. இந்நிலையில், ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 15 விழுக்காடு பங்குகள் (2.4 கோடி பங்குகள்) விற்கப்படவுள்ளன. பொதுமக்கள் அதிகளவில் ஐஆர்சிடிசி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினால், கூடுதலாக ஐந்து விழுக்காடு பங்குகளையும்(80 லட்சம் பங்குகள்) விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.