இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவின்போது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் சில ஆன்லைன் நிறுவனங்களும் அடங்கும்.
இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா விடுத்துள்ள அறிக்கையில், ''மக்களின் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக சில ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்தோம். ஆனால் அந்த அனுமதியை பயன்படுத்தி தற்போது மொபைல், ஃபிரிட்ஜ், ஆடைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.