டெல்லி: சீனா உள்ளிட்ட பிற அண்டை நாடுகளிடமிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் ஏலதாரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏதுவாக 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் உருவாக்கப்பட்டன.
அண்டை நாடுகள் இடையேயான எல்லை பகிர்வுகள் விவகாரத்தின் காரணாக, இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. அதன்படி சீனா உள்ளிட்ட பிற அண்டை நாடுகளிடமிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் டாப் 50க்குள் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவனம்!
இது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று மத்திய வருவாய் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு தரப்பிலிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.