பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.17) நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியாவை உலகளவில் உற்பத்தித்துறையின் பெருஞ்சக்தியாக மாற்ற அரசு தொடர்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் முக்கிய அங்கமாக, தொலைத்தொடர்பு சாதன உற்பத்தி திட்டத்திற்கு ரூ.12,195 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ரூ. 2.44 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தி மேற்கொள்ள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.