தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பார்தி இன்ஃப்ராடெல், இந்துஸ் டவர்ஸ் இணைப்புக்கு ஒப்புதல் - பார்தி இன்ஃப்ராடெல், இந்தூஸ் டவர்ஸ் இணைப்பு

டெல்லி: பார்தி இன்ஃப்ராடெல் இந்துஸ் டவர்ஸ் இணைப்புக்கு தொலைதொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

merger of Bharti Infratel Indus Towers  Bharti Infratel  Indus Towers  business news  பார்தி இன்ஃப்ராடெல், இந்தூஸ் டவர்ஸ் இணைப்புக்கு ஒப்புதல்  பார்தி இன்ஃப்ராடெல், இந்தூஸ் டவர்ஸ் இணைப்பு  Govt approves merger of Bharti Infratel, Indus Towers: Sources
Govt approves merger of Bharti Infratel, Indus Towers: Sources

By

Published : Feb 22, 2020, 6:17 AM IST

Updated : Feb 22, 2020, 11:11 AM IST

நாட்டின் மிகப்பெரிய மொபைல் டவர் நிறுவனமான இந்துஸ் டவர்ஸை பார்தி இன்ஃப்ராடலுடன் இணைக்க தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பார்தி இன்ஃப்ராடெல் மற்றும் இந்துஸ் டவர்ஸ் இணைந்தால் 1,63,000க்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய நிறுவனமாக திகழும். இது 22 தொலைதொடர்பு சேவை பகுதிகளிலும் செயல்படும். ஒருங்கிணைந்த நிறுவனம் சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய கோபுர நிறுவனமாக இருக்கும்.

பார்தி இன்ஃப்ராடெல் மற்றும் வோடபோன் ஆகியவை இந்துவில் தலா 42 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. மொபைல் டவர் நிறுவனத்தில் வோடபோன் ஐடியா 11.15 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இந்த நிலையில், பார்தி இன்ஃப்ராடெல் மற்றும் இந்து டவர்ஸின் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் பெயரை இந்து டவர்ஸ் லிமிடெட் என்று மாற்றி, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து பட்டியலிடப்படும்.

இந்த கோபுர இணைப்பு ஒப்பந்தத்தை சரியான நேரத்தில் முடிப்பது நிறுவனங்களுக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இது பார்தி மற்றும் வோடபோன் ஐடியா பங்குகளை ஏற்றுவதற்கும் நிதி திரட்டுவதற்கும் அனுமதிக்கும்.

இதையும் படிங்க:2019, டிசம்பரில் நிதி பற்றாக்குறை 4.56 விழுக்காடு

Last Updated : Feb 22, 2020, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details