தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உட்கட்டமைப்புக்கு ரூ.100 லட்சம் கோடி - தயாராகும் மத்திய அரசு! - 100 lakh crore investment

டெல்லி: உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு 100 லட்சம் கோடி ரூபாய் நிதி உருவாக்கம் செய்ய மத்திய நிதியமைச்சகம் செயற்குழு ஒன்றை நியமித்துள்ளது.

Infrastructure

By

Published : Sep 7, 2019, 4:47 PM IST

வரப்போகும் ஐந்தாண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக 100 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என 2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் புதிய குழு ஒன்றை மத்திய நிதியமைச்சகம் தற்போது நியமித்துள்ளது.

நிதியமைச்சகத்தின் ட்வீட்

பொருளாதார துறை செயலாளர் அடானு சக்ரபோர்தி தலைமையில் நியமனம் செய்யப்பட்டுள்ள இக்குழுவில் நிதி ஆயோக், நிதி அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் இக்குழு தனது ஆய்வறிக்கையை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவின் முதலீடு அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details