'நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள், 2020' இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்டு இந்திய நுகர்வோருக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோர் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் கீழ் நடவடிக்கைகளை எடுக்கப்படும். புதிய விதிகளின்படி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் மொத்த விலையையும், அதன் மற்ற கட்டணங்களையும் தெளிவாகக் காட்ட வேண்டும்.
மேலும், விற்பனையாகும் பொருள்களில் காலாவதி தேதி, எங்கு உற்பத்தி செய்யப்பட்டது உள்ளிட்ட நுகர்வோர்கள் சரியான முடிவை எடுக்க தேவையான அனைத்துத் தகவல்களும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதுதவிர ரிட்டன், ரீஃபன்ட், பரிமாற்றம், உத்தரவா
தம் உள்ளிட்ட தகவல்களும் இணையத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், நுகர்வோர் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்தால், ரத்துசெய்யும் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. நுகர்வோர் ஆர்டர் செய்த பொருள்களை விற்பனையாளர்களால் (seller) கொடுக்க முடியவில்லை என்றால், விற்பனையாளர்களிடம் இருந்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலித்து நுகர்வோரிடம் கொடுத்தால் மட்டுமே, நுகர்வோரிடமிருந்து நிறுவனங்கள் ரத்துசெய்யும் கட்டணங்களை வசூலிக்கலாம்.
இவை தவிர, விற்பனையாளரின் பெயர், அலுவலக முகவரி உட்பட முக்கிய விவரங்களை அதன் நுகர்வோர் தெரிந்துகொள்ளும்படி இணையத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும், புகாரளிக்கும் நுகர்வோர் பதிவுசெய்த ஒவ்வொரு புகாருக்கும் டிக்கெட் எண்ணை வழங்க வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் தங்கள் புகாரின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
மேலும், விற்பனையாளர் இணையத்தில் காட்டியிருக்கும் புகைப்படமும் அவர்கள் விற்கும் பொருளும் ஒரே மாதிரி உள்ளதை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ஏன் சபாஹர் ரயில்வே திட்டத்தை இந்தியா கைவிட்டது?