இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராக கோடக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோடக் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டர். கரோனாவுக்குப் பின் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தொழிலாளர் சட்டங்களில் மாநில அரசுகள் செய்துள்ள திருத்தங்கள் ஆகியவை குறித்து ஈடிவி பாரத்திற்கு தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், நாட்டில் முதலீடுகளைக் கவர்வதன் மூலம்தான் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைந்து சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம். தற்போது பல மாநிலங்கள், தொழிலாளர்கள் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளன.
தேவைக்கேற்ப தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது தற்காலிகப் பலன்களை தந்தாலும், தொழிலாளர்களின் நலன் பறிபோவதற்கும் இது வழிவகை செய்ய வாய்ப்புள்ளது. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் அபாயங்கள் இதன் மூலம் ஏற்படலாம். எனவே சட்டத் திருத்தம் என்பது தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மீட்டெடுக்க நகர்ப்புறங்களுடன் சேர்ந்து கிரமாங்களையும் சீராக வளர்த்தெடுப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வட்டிக்கு சலுகையா? இல்லை வட்டிக்கு வட்டியா? கேள்வியெழுப்பும் உச்ச நீதிமன்றம்