வணிகத் தேவைக்காக இ-வே பில்கள் வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் பில்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் பொருட்களை கொண்டு செல்ல உதவும். தற்போதுள்ள நிலவரப்படி, மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதியோடு இ-வே பில்கள் காலாவதியாகிறது.
இ-வே பில்களின் செல்லுப்படியாகும் காலம் நீட்டிப்பு! - இ-வே பில்களின் செல்லுப்படி காலம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!
டெல்லி: ஊரடங்கு உத்தரவால் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் சிக்கியுள்ள நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்குத் தேவையான இ-வே பில்களின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால், நாடு முழுவதும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்கியுள்ள காரணத்தினால், இ-வே பில்களின் செல்லுபடியாகும் தேதி வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது வரும் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா ஊரடங்கு - 2 லட்சம் ஏழைகளுக்கு உணவளித்த ஐ.ஆர்.சி.டி.சி!