தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனாவால் நீடிக்கப்படும் நிதியாண்டு? - நிதியமைச்சகம் விளக்கம் - 2019-20 நிதியாண்டு

டெல்லி: கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இந்த நிதியாண்டு நீடிக்கப்படுவதாக பரவிய தகவலுக்கு நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Extending Financial Year
Extending Financial Year

By

Published : Mar 31, 2020, 9:13 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று இந்தியாவில் மிக வேகமாகப் பரவிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட பலரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு கடனுக்கான தவணைகள், EMI உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 2019-20ஆம் நிதியாண்டு மார்ச் 31இல் இருந்து வரும் ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இணையத்தில் வைரலாக பரவிவந்த இந்தச் செய்திக்கு நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

“இந்திய முத்திரைச் சட்டத்தில் (Indian Stamp Act) செய்யப்பட்ட சில திருத்தங்கள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்தது. தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அதை வரும் ஜூலை 1ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று (மார்ச்-30) இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு தவறாகப் பரவிவருகிறது” என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்!

ABOUT THE AUTHOR

...view details