பத்திரிகையாளர்கள் தங்களது வணிக ரீதியிலான புதிய யோசனைகளை செயல்படுத்த உதவும் வகையில் பிரபல நிறுவனமான கூகுள் புதிய திட்டத்தை முன்னதாக அறிவித்திருந்தது.
கூகுள் நியூஸ் இனியாஷியேட்டிவ் (ஜிஎன்ஐ) எனப்படும் இந்த முன்னெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தேவையான பயிற்சி, ஆதரவு, நிதியுதவி ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், அமெரிக்க நாட்டில் கூகிள் நியூஸ் இனிஷியேட்டிவின் (ஜிஎன்ஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தொடக்க முகாமுக்கு விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மொத்தம் 24 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், "நீங்கள் ஒரு பத்திரிகையாளராகவும், ஒரு புதிய திட்டத்தை தொடங்கும் முனைப்புடனும் இருந்தால் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்" என்று ஜிஎன்ஐ ஸ்டார்ட்அப்ஸ் தொடக்க முகாமின் இயக்குநர் பிலிப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில், கனடா நாட்டிற்கான இந்த முன்னெடுப்பு தொடங்கும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது
இதையும் படிங்க:தடுப்பூசி போடலன்னா ஜெயில்ல போட்டுருவேன் - எச்சரிக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர்